இடுகைகள்

aadheenam லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பேரூர் ஆதீனம் - கல்விப்பணி

  கல்விப்பணி காமராஜர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபொழுது பள்ளி செல்லும் குழந்தைகள் பசியோடு கல்வி கற்க இயலாது என்று உணர்ந்து அவர்களின் வயிற்றுத்தீ தணிய  மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த மதிய உணவு வழங்கும் திட்டம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன் முதலில் சர்க்கரைப் பொங்கல் வழங்கி தொடங்கப்பட்டது. இத்தகு பெருமையுடையது  பள்ளி.       தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளால் நம் தமிழ்க் கல்லூரியில் சத்வித்யா சன்மார்க்க சங்கமானது தொடங்கப்பெற்றது. அச்சங்கம் நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும் பெருமையுடையது.   1952 ஆம் ஆண்டு தவத்திருசாந்தலிங்க அடிகளார் பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகச முதாயத்திற்கு ஆன்றோர்களையும் ,  சான்றோர்களையும் தந்துள்ளது .   குருகுல மரபை உள்ளடக்கிய நவீன கல்விமுறையில் ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை கற்க கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் நமது அடிகளார் .   அமெரிக்கா, கனடா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , மொரீஷி...

சிரவை ஆதீனம் - சமயப்பணிகள்

ஆதீனக்கோயில் திருப்பணிகள் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் ஆகிய ஞானதீபத்தில் ஏற்றப்பட்ட சுடர் விளக்காக 14 . 06 . 1994 அன்று நான்காவது குருமகா சந்நிதானமாக அருளாட்சி ஏற்றார். 08 . 12 . 2001 அன்று தவத்திரு குருமகாசந்நிதானங்களுக்கு பழனியில் அருளாட்சி விழா மிகச்சிறப்பாக முறைப்படி நடைபெற்றது. 15 . 09 . 1996 இல் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து திருக்கோவில்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. 13 . 0 4 . 2009 அன்று அருள்மிகு பைரவர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு. 30 . 0 8 . 2009 அருள்மிகு தண்டபாணிக்கடவுள் உள்ளிட்ட அறுசமயக் கோயில்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, 16 , 000 சதுரடிப் பரப்பில் திருக்கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகுந்த பொருட்செலவில் திருக்கோயில் திருப்பணி, திருமதில் திருப்பணி, மடப்பள்ளி, வாகன நிறுத்தம் எனக் கட்டி முடிக்கப்பட்டன. 20 , 21 . 12 . 2011 நவக்கிரக திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா. 23 . 03 . 2012 அறுபத்துமூவர் சிலை நீராட்டு, 108 கோ பூசை, 1008 திருவிளக்கு வழிபாடு. 18 . 11 . 2012 கௌமாரம் சுசீலா பன்...