சிரவை ஆதீனம் - சமயப்பணிகள்

ஆதீனக்கோயில் திருப்பணிகள்

  • தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் ஆகிய ஞானதீபத்தில் ஏற்றப்பட்ட சுடர் விளக்காக 14.06.1994 அன்று நான்காவது குருமகா சந்நிதானமாக அருளாட்சி ஏற்றார்.
  • 08.12.2001 அன்று தவத்திரு குருமகாசந்நிதானங்களுக்கு பழனியில் அருளாட்சி விழா மிகச்சிறப்பாக முறைப்படி நடைபெற்றது.
  • 15.09.1996 இல் அருள்மிகு தண்டபாணிக் கடவுள் திருக்கோயில் உள்ளிட்ட அனைத்து திருக்கோவில்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது.
  • 13.04.2009 அன்று அருள்மிகு பைரவர் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு.
  • 30.08.2009 அருள்மிகு தண்டபாணிக்கடவுள் உள்ளிட்ட அறுசமயக் கோயில்களுக்கும் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா, 16,000 சதுரடிப் பரப்பில் திருக்கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு மிகுந்த பொருட்செலவில் திருக்கோயில் திருப்பணி, திருமதில் திருப்பணி, மடப்பள்ளி, வாகன நிறுத்தம் எனக் கட்டி முடிக்கப்பட்டன.
  • 20,21.12.2011 நவக்கிரக திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா.
  • 23.03.2012 அறுபத்துமூவர் சிலை நீராட்டு, 108 கோ பூசை, 1008 திருவிளக்கு வழிபாடு.
  • 18.11.2012 கௌமாரம் சுசீலா பன்னாட்டு உறைவிடப் பள்ளியில் தவத்திரு கஜபூசைச் சுந்தர சுவாமிகள் ஐம்பொன் சிலை திறப்பு விழா.
  • 04.02.2015 அன்று அழகிய சோலை வனத்திற்கு நடுவில் மடாலயத்திற்கு அருகில் பொற்றாமரைக்குளம் திறப்பு விழா.s
  • 05.07.2017 1000 ஆவது கிருத்திகை விழா.

பிறவகைச் சமயப்பணிகள்

திருமுறை முற்றோதல்.

28.04.2007 முதல் இல்லங்கள் தோறும் திருமுறை முற்றோதல் நடைபெற்று வருகிறது.

திருவிளக்கு வழிபாடு.

21.01.1992 முதல் திருவிளக்கு வழிபாடு தொடங்கப்பட்டு முறைப்படி தமிழில் நடைபெற்று வருகிறது. தைப்பூசம் தெப்பத்தின் போது 108 திருவிளக்கு வழிபாடும், பிற திருக்கோயில்கள், இல்லங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.

நவராத்திரி விழா.

1992 முதல் நவராத்திரி விழா ஒன்பது நாட்களும் திருமுறை இசை, கலை நிகழ்ச்சிகள், சிறப்புரை, அருளுரை, திருவிளக்கு வழிபாடு, பேரொளி வழிபாடு என நடைபெற்று வருகிறது.

இசை விழா.

1999 ஆம் ஆண்டு முதல் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் குருபூசை நாளையொட்டி அருணகிரிநாதர் திருப்புகழ் இசைவிழா நடைபெற்று வருகின்றது. மாவட்டத்தில் உள்ள பல்வேறு திருப்புகழ் குழுவினர் பங்கேற்கின்றனர்.

பூசாரிகளுக்குப் பயிற்சி வகுப்பு.

26.01.2001 முதல் இந்து சமயத்தின் அடிப்படை உண்மைகளைத் தெரிந்து கொள்வதற்கும், திருக்கோயிலில் பூசைப் பணி திருவிழாக்களை நடத்துவதற்கும் ஆண்டுதோறும் பூசாரிகளுக்குப் பயிற்சி வகுப்பு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.

சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு.

10.05.2011 முதல் தென்னக சைவப் பேரவையுடன் இணைந்து சைவ சித்தாந்த நேர்முகப் பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகின்றது.

மலர்க் காவடிப் பெருவிழா.

1997 முதல் ஆங்கில ஆண்டுப் பிறப்பு முதல் ஞாயிற்றுக் கிழமையன்று முருகப் பெருமானுக்கு மலர்க்காவடி எடுத்துச் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. பெரும்பாலும் மலைக் கோவில்களில் நடைபெற்று வருகிறது.

சிரவை அருட்பணி மன்றம்.

புதிதாகக் கட்டப்படும் கோயில்கள், வீடுகளில் நடைபெறும் திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் தொடக்கம் முதலிய வாழ்வியல் சடங்குகளை தமிழ் வழியில் நடத்திக் கொடுக்க சிரவை அருட்பணி மன்றம் மக்களின் தேவைகளை அறிந்து  நிறைவேற்றி வருகிறது.

வள்ளி தெய்வானை மகளிர் நற்பணி மன்றம்.

திருவிளக்கு வழிபாடு, உழவாரப்பணி, திருமடம், திருக்கோயில் விழாக்களில் பங்கேற்று சிறப்பாகப் பணிகளைச் செய்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பேரூர் ஆதீனம் - கல்விப்பணி

சைவ சமயம் பற்றிய சில அருமையான இணைய தளங்கள்

மதுர மதுரம் ஸ்ரீ ராம நாமம்