பேரூர் ஆதீனம் - கல்விப்பணி
கல்விப்பணி
காமராஜர் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தபொழுது பள்ளி செல்லும் குழந்தைகள் பசியோடு கல்வி கற்க இயலாது என்று உணர்ந்து அவர்களின் வயிற்றுத்தீ தணிய மதிய உணவு வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தார். அந்த மதிய உணவு வழங்கும் திட்டம் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் மேல்நிலைப் பள்ளியில் தான் முதன் முதலில் சர்க்கரைப் பொங்கல் வழங்கி தொடங்கப்பட்டது. இத்தகு பெருமையுடையது பள்ளி.
தனித்தமிழ்
இயக்கத்தின் தந்தை என்று போற்றப்படும் மறைமலையடிகளால் நம் தமிழ்க் கல்லூரியில் சத்வித்யா
சன்மார்க்க சங்கமானது தொடங்கப்பெற்றது. அச்சங்கம் நூற்றாண்டுகளைக் கடந்து இயங்கி வரும்
பெருமையுடையது.
1952 ஆம் ஆண்டு
தவத்திருசாந்தலிங்க அடிகளார் பள்ளி தொடங்கப்பட்டு 60 ஆண்டுகளுக்கும் மேலாகச
முதாயத்திற்கு ஆன்றோர்களையும், சான்றோர்களையும் தந்துள்ளது.
குருகுல மரபை
உள்ளடக்கிய நவீன கல்விமுறையில் ஒன்றாம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை கற்க கல்வி
நிறுவனங்களை உருவாக்கியவர் நமது அடிகளார்.
அமெரிக்கா, கனடா, தென்
ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா , மொரீஷியஸ், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் முதலான அனைத்து
நாடுகளிலும் வாழும் தமிழர்கள் தமிழ் சமயநெறியினை பின்பற்றி வாழ வழிகாட்டிவருபவர்.
அருளாளர் தவத் திரு ஓங்காரனந்தா சுவாமிகள் மற்றும் இந்திய குடிமைப்பணியிலே தேர்ச்சி பெற்று மாவட்ட ஆட்சியராக இருந்த திரு.சிவக்குமார் அவர்களும் இப்பள்ளியிலே பயின்ற மாணாக்கர்கள்.
40 வருடங்களுக்குமுன்
பிறசமயக் கல்விக் கூடங்கள் மிகுந்திருந்த காலகட்டத்தில் நம் தாய்மொழி வழிக் கல்வி
நிலையங்களின் அவசியத்தை உணர்ந்து. பல ஆன்றோர்களும், அறிஞர்களும் தாய்
மொழிக்கல்வியை கற்றதனாலேயே சிறந்து விளங்கினர் என்பதையும் கருத்தில்கொண்டு ஆறுமுக
அடிகளார் தாய் தமிழ்ப் பள்ளி தொடங்கப்பெற்று 25 ஆண்டுகளாக தாய்மொழி
வழிக்கல்வியை கற்பித்துவருகிறது.
1974 ஆம் ஆண்டு ஞானாம்பிகை
நுழைவுரிமைப் பள்ளி தொடங்கப்பட்டு ஆங்கிலவழிக் கல்வியுடன் மரபுசார்ந்த பழக்க
வழக்கங்களையும் ஆன்மீகத்தையும் போதித்துவருகிறது.
1953 ல் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல்கல்லூரி தொடங்கப்பட்டது.கொங்குமண்டலம் முழுதும் பல சான்றோர்களையும் தமிழ் ஆசான்களையும் உருவாக்கிய பெருமை இக்கல்லூரியையேசாரும்.
அருளாளர் சிரவை ஆதீனம் சுந்தரசுவாமிகள் பலதேசியவிருதுகளை பெற்றமும் மொழிப்புலமையாளர் முனைவர் அ.அ.மணவாளன் இரண்டு முறை சாகித்திய அகாடமி விருது பெற்ற கவிஞர் புவியரசு மற்றும் அரசவைக் கவிஞராகவும் மேலவை துணைத்தலைவராகவும் விளங்கிய புலவர் புலமைப்பித்தன் அவர்களும் இக்கல்லூரியில் பயின்ற தலைமாணாக்கர் ஆவர்.
கலை அறிவியல் வணிகவியல் பட்டப்படிப்புகள் மற்றும் முதுகலைபட்டப்படிப்புகள் எம்ஃபில், பிஎச்டி படிப்புகளும் கற்பிக்கப்படுகிறது
பள்ளி கல்லூரி
மாணவர்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளமாணவர்களுக்கு உதவித் தொகையாக ஆண்டிற்கு
சுமார் ரூபாய் 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது மேலும் எம்ஃபில் , பிஎச்டி ஆய்வு
செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்படுகிறது.
2004 ஆம் ஆண்டு
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் அடிகள் பெருந்தகையின் தலைமையில் பல
ஆசிரியர்களும் மாணவர்களும் சென்று பல உதவிகளைச் செய்து வந்துள்ளனர். மேலும் 2018 ஆம்
ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் அடிகள் பெருந்தகையின் தலைமையில் சென்று
பல்வேறு உதவிகளைச் செய்து வந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
பேரூராதீனத்தில் இயங்கிவரும்
குமாரதேவர் பதிப்பகத்தின் வாயிலாக பல்வேறு நூல்கள் இதுவரை பதிப்பிக்கப்பட்டுள்ளன. மேலும்
சிவசாந்தலிங்கர் என்ற திங்கள் இதழானது சிறப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.
ஆண்டுதோறும் பிப்ரவரி
21ஆம் நாள் உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு நம் அடிகளாரின் தலைமையில் உலகத் தாய்மொழி
நாள் பேரணி நடத்தப்பெற்று தாய்மொழியின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்தப்படுகின்றது.
கோவை மாவட்ட அளவிலான
அனைத்துக் கல்லூரி திருக்குறள் பேச்சுப்போட்டியானது கல்லூரி தொடங்கிய ஆண்டு முதலாக
இன்று வரை ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பெற்று சத்வித்யா சன்மார்க்க சங்க ஆண்டுவிழாவின்
போது அதிகப்புள்ளி பெற்ற கல்லூரிக்கு 50,000 ரூபாய் மதிக்கத்தக்க வெள்ளி சுழற்கலனும்
மாணாக்கருக்கு வெள்ளிப் பதக்கமும் பரிசாக வழங்கப்படுகிறது.
அடிகளின் அருளாணையின்
வண்ணம் தொல்காப்பியர் பேரவையானது தொடங்கப்பெற்று திங்கள்தோறும் வரும் முதல் ஞாயிறன்று
பேரவை செயல்பட்டு வருகின்றது. நியூசெர்சியில் தொடங்கப்பெற்ற தொல்காப்பியர் மன்றத்தின்
கோவை கிளை மன்றமாக இப்பேரவை இயங்குகிறது. பேரவையின் செயல்பாடுகள் திங்கள்தோறும்
youtube இல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் தொல்காப்பியத்தின்
பெருமை உலகெங்கும் சென்று சேர்கிறது.
Courtesy:
https://www.thiruvarul.net/posts/peroor-aadheenam
கருத்துகள்
கருத்துரையிடுக