சைவ சமயம் பற்றிய சில அருமையான இணைய தளங்கள்
சைவ சமயம் பற்றிய விஷயங்களைத் தெரிந்து கொள்ள நமக்கு இணையம் ஒரு மிகப்பெரிய, அதே சமயம் எளிய வழியாக உள்ளது. ஆனால், ஒரு சொல்லைத் தேடத் தொடங்கினால், ஆயிரக் கணக்கான தளங்களை நாம் காண்கிறோம். இவற்றில் எது சரியான விஷயத்தைக் கொடுக்கிறது, எது சரியில்லை என்று கண்பது மிகவும் கடினம்.
நாம் கண்ட சில தளங்கள், தரமான, உண்மையான விஷயங்களை, எளிய முறையில் தருகின்றன. அந்தத் தளங்களுக்கு எங்கள் நன்றிகள்.
இந்தத் தளத்தில், சைவப் பாடல்கள், தல புராணங்கள் முதலியவை தரப்பட்டுள்ளன. அருமையான தொகுப்பு.
பன்னிரு திருமுறைகள், திருநெறி நூல்கள், அடியார்களின் வரலாறு, திருத்தலங்கள் பற்றிய விஷயங்கள் எல்லாம் மிக அருமையாகத் தரப்பட்டுள்ளன. அத்துடன், திருமுறைப் பாடல்களை மிகச்சிறந்த ஓதுவார்களின் குரலில் பதிவு செய்து கொடுத்துள்ளார்கள். பாடல்களின் தெளிவுரையும் உள்ளது.
http://madhisudi.blogspot.com/
சிவசிவா என அன்புடன் அழைக்கப்படும் திரு. வி. சுப்பிரமணியன் அவர்களது சிவபரமான மரபு வழிப்பாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெண்பா, விருத்தம் முதல் பல வகையான செய்யுள்களும், திருப்புகழ் போன்ற வண்ணப் பாடல்களும், சிலேடைப் பாடல்களும் இந்த தளத்தில் உள்ளன. இக்காலத்தில் இயற்றப்பட்டவை ஆனாலும், மிகச்சிறந்த சொல்வளமும், பொருள்வளமும் அடங்கிய பாடல்கள் இவை.
கருத்துகள்
கருத்துரையிடுக