மதுர மதுரம் ஸ்ரீ ராம நாமம்
பகவான் ஸ்ரீ மந் நாராயணன் , த்ரேதா யுகத்தில் , ராமபிரானாக , அயோத்திய அரசர் தசரதனுக்கும் கௌசல்யைக்கும் சித்திரை மாதம் , நவமி அன்று , புனர்வசு நக்ஷத்திரத்தில் மகனாகப் பிறந்தார். அத்திருநாளையே ராம நவமி என்று நாம் கொண்டாடுகிறோம். தர்மத்தின் படி வாழ்ந்து காட்டியவர் ராமபிரான். நீதி வழுவாது ஆட்சி புரிந்து , மக்களுக்கு நன்மை பல செய்தார். " ராம" என்ற நாமமே நன்மை அளிக்க வல்லது. ராம நாமம் எப்படி தோன்றியது என்று பார்ப்போம். அஷ்டாக்ஷர மந்திரமாம் ஓம் நமோ நாராயணாய என்பதில் இருந்து ரா என்ற அக்ஷரமும் , பஞ்சாக்ஷர மந்திரமாம் நமசிவாய என்பதில் இருந்து ம என்ற அக்ஷரமும் ஒன்று சேர்ந்து ராம என்ற நாமத்தைத் தந்தது. வேடன் ஒருவன் காட்டில் திரிந்து கொண்டு , வருவோர் போவோரை வறுத்தியெடுத்துக் கொண்டிருந்தான். அங்கு வந்த நாரதர் , " உனக்கு உய்ய ஒரு வழியைச் சொல்கிறேன். கேள்." என்றார். அவனும் சரி என்று சொல்ல , " ' ராம ராம '" என்று சொல்லிக்கொண்டே இரு. இவ்வழியாக ஒரு நாள் பகவான் ஸ்ரீ மந் நாராயணன் வருவார். உனக்கு ஒரு வழி தருவார்." என்றார். வேடனுக்கு ராம என்று வரவில்லை. அவன் நின்று